பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் மனைவி மீது தாக்குதல் நடாத்திய நபர் கைது

#Arrest #Police #Attack #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் மனைவி மீது தாக்குதல் நடாத்திய நபர் கைது

பேருவளை பிரதேச சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேருவளை ஹெட்டிமுல்ல சந்தியில் பெண்ணுக்கு சொந்தமான கடைக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பெண்ணுக்கு களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிறிது காலமாக இடம்பெற்ற தகராறு காரணமாக குறித்த பெண் சந்தேக நபரால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஹெட்டிமுல்ல மல்லபொக்க பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4