இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் போது பெண் ஒருவர் உயிரிழப்பு

#Death #Police #SriLanka #Lanka4 #sri lanka tamil news #Tamilnews
Prathees
3 years ago
இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் போது பெண் ஒருவர் உயிரிழப்பு

தலத்துஓயா பிரதேச செயலகத்தில் இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சியின் போது பெண் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.

அரிசி வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

தலத்துஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

விசாரணையில் உயிரிழந்த 68 வயதுடைய பெண் இதயநோயாளி என்பதும், நேற்று அவர் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4