IPL Match12 - சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

#India #IPL2023 #Mumbai #Chennai #win #T20 #Tamilnews #Sports News #Lanka4
Prasu
3 years ago
IPL Match12 - சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இன்று மும்பையில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. 

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷன் அதிரடியாக ஆடினர். 

அணியின் எண்ணிக்கை 38ஆக இருந்தபோது ரோகித் சர்மா 21 ரன்னில் அவுட்டானார். இஷான் கிஷன் 31 ரன்னில் வெளியேறினார். கேமரூன் கிரீன் 12 ரன்னும், சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 21 ரன்னில் அவுட்டானார். 

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி தனது ஆட்டத்தை தொடங்கியது.  தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், கான்வே களமிறங்கினர்.

தொடக்கத்தில் சென்னை அணியின் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே அதிரடி காட்டினார். 

பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். குறிப்பாக மும்பை அணியின் அர்சத் கான் வீசிய ஓவரில் 1 சிக்ஸ்ர், 4 பவுண்டரி பறக்கவிட்டார். 

தொடர்ந்து அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார்.மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து ஆடினார். தொடர்ந்து ஆடிய ரஹானே 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து ஷிவம் துபே , ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். சிறப்பாக விளையாடிய துபே 28 ரன்களில் வெளியேறினார். 

அடுத்து ராயுடு களமிறங்கி பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். இறுதியில் சென்னை அணி 18.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 

ருதுராஜ் 40ரன்களும், ராயுடு 20 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபாரமாக வெற்றிபெற்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4