யாழ். நகரில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த இரு இளைஞர்கள் கைது

#drugs #Police #Arrest #Jaffna #Lanka4
Kanimoli
3 years ago
யாழ். நகரில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த இரு இளைஞர்கள்  கைது

யாழ். நகரில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த இரு இளைஞர்களை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர்களை இடைமறித்து சோதனை செய்த போது அவர்களிடமிருந்து 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் 5 சந்திப் பகுதி யைச் சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4