ராஜிதவை கட்சியில் வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை: சமகி ஜன பலவேகய

#Sajith Premadasa #Samagi Jana Balawegaya #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
ராஜிதவை  கட்சியில் வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை: சமகி ஜன பலவேகய

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க சமகி ஜன பலவேகய தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சேனாரத்ன விரைவில் சமகி ஜன பலவேகய கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

“இப்போது ராஜிதவை  கட்சியில் வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை” என்று அவர்  தெரிவித்தார்.

கட்சிக்கு எதிராக செயற்படும் அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்த சில மணி நேரங்களிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சேனாரத்னவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4