IPL Match13 - கடைசி ஓவரில் 5 சிக்சர் அடித்து கொல்கத்தா அணி வெற்றி

#India #IPL2023 #T20 #Gujarat #Kolkatta #win #Tamilnews #Sports News #Lanka4
Prasu
3 years ago
IPL Match13 - கடைசி ஓவரில் 5 சிக்சர் அடித்து கொல்கத்தா அணி வெற்றி

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் அரை சதமடித்து 53 ரன்னில் அவுட்டானார். 

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய விஜய் சங்கர் 21 பந்தில் அரை சதமடித்தார். அவர் 63 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷுப்மன் கில் 39 ரன்னில் அவுட்டானார். 

கொல்கத்தா சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. 

தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஜெகதீசன் 6 ரன்னும், குர்பாஸ் 15 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 3வது ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ரானா ஜோடி அதிரடியாக ஆடியது. 

இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்த நிலையில் நிதிஷ் ரானா 45 ரன்னில் அவுட்டானார். வெங்கடேஷ் அய்யர் 40 பந்தில் 5 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்து வெளியேறினார். 

17-வது ஓவரை வீசிய ரஷீத் கான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆண்ட்ரூ ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்குர் ஆகியோரை வெளியேற்றினார். 

ஆனால், கடைசி ஓவரில் 5 சிக்சர்களை அடித்து அணியை திரில் வெற்றிபெறச் செய்தார் ரிங்கு சிங். இறுதியில், கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. குஜராத் சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4