பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு

#Dinesh Gunawardena #PrimeMinister #Sri Lanka President #Parliament #Lanka4
Kanimoli
3 years ago
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (10) காலை இடம்பெறவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி இன்றைய தினம் கலந்துரையாடல் வழங்கப்பட்டுள்ளதுடன் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துரையாடலில் பங்கேற்பார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜீ. புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை பொது திறைசேரி வழங்காமையால் வாக்கெடுப்பு நடத்துவதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய தினம் பிரதமருடனான சந்திப்பின் போது இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (11) மீண்டும் கூடவுள்ளது.

பிரதமரின் இன்றைய கலந்துரையாடலின் பின்னர் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4