IPL 2023: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சு தேர்வு

#sports #Sports News #2023 #IPL2023
Mani
3 years ago
IPL 2023: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி விளையாடும் 200-ஆவது போட்டி இதுவாகும். இதனால் தனது 200 ஆவது கேப்டன்ஷிப் போட்டியில் அணிக்கு தோனி வெற்றியைத் தேடித் தருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று +2.067 நெட் ரன்ரேட்டுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது. சென்னை அணியும் இதேபோன்று 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் +0.356 என்ற ரன்ரேட்டின் அடிப்படையில் 5 ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காணும் என்பதால் சென்னைமற்றும் ராஜஸ்தான் அணிகள் வெற்றிக்காக தீவிரமாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4