யாழ் வைத்தியசாலையில் சிசுவொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை

#SriLanka #srilankan politics #sri lanka tamil news #Lanka4 #Sri Lankan Army
Prabha Praneetha
3 years ago
யாழ் வைத்தியசாலையில் சிசுவொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை

யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசுவொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜாவினால், மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்கான கோரிக்கை நேற்றைய தினம் விடுக்கப்பட்டுள்ளது.

புலோலி வடக்கு, கூவில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். குறித்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் (11.04.2023) குழந்தை பிறந்த போதிலும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விடுத்த பணிப்புரைக்கு அமைய, சட்ட வைத்திய அதிகாரி பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4