முல்லைத்தீவில் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த சிறுவன்!

#SriLanka #Death #Fever #baby #Mullaitivu #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
3 years ago
முல்லைத்தீவில் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த சிறுவன்!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேத்தில் வசித்துவரும் நான்கு வயதுடைய சிறுவன் நிமோனியா காச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

நேற்று (12) இரவு சிறுவன் சளிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 2.00 மணியளவில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இதில் உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த நிர்மலன் கபீஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் பிரோத பரிசோதனைகள் இன்று முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது சிறுவன் நிமோனியா காச்சல் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4