காலியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

#GunShoot #Crime #Death #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
காலியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

காலி, தடல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தடல்ல பிரதேசத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின்னர் இரவு இடம்பெற்ற டீஜே இசை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த உயிரிழந்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு சந்தேகநபர்கள் இருவர் வந்துள்ளதாகவும், சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பாக உயிரிழந்தவருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமையினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4