காணாமல் போன இரண்டரை வயது குழந்தையின் சடலம் கால்வாய் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது

#Death #Police #Investigation #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
காணாமல் போன இரண்டரை வயது குழந்தையின் சடலம் கால்வாய் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது

காலி நெலுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலவத்த பாமன்கட பிரதேசத்தில் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயிருந்த இரண்டரை வயது குழந்தையின் சடலம் சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தை இருந்த வீட்டுக்கு அருகில் ஓடும் கால்வாயில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மதியம் முதல், காணாமல் போன குழந்தையை தேடும் பணியில் பொலிசார், ராணுவம் மற்றும் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டனர்.

அதன்படி அந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் வீட்டின் அருகில் ஓடும் ஓடையில் இருந்து குழந்தையின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4