எரிபொருள் ஒதுக்கீடு குறித்து இன்று தீர்மானம்

#petrol #QRcode #SriLanka #sri lanka tamil news #Lanka4
Prathees
3 years ago
எரிபொருள் ஒதுக்கீடு குறித்து  இன்று தீர்மானம்

பண்டிகைக் காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

நாளை (18) முதல் மீண்டும் அமுல்படுத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அண்மையில், முச்சக்கர வண்டிகளுக்கான 5 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீட்டை 8 லீற்றராகவும், மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை 4 லீற்றராக 7 லீற்றராகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 40 லிட்டரிலிருந்து 60 லீற்றராகவும், கார்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும், லாரிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 லீற்றரிலிருந்து 75 லீற்றராகவும், வேன்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதிகரிக்கப்பட்ட கோட்டா மதிப்புகள் அதே முறையில் பராமரிக்கப்படுமா அல்லது முந்தைய மதிப்புகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்று எரிசக்தி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4