ரோஹிதவுக்கு வழங்காமல் ராஜிதவுக்கு கொடுப்பது பாரிய அநீதி!

#SriLanka #Sri Lanka President #SLPP #sri lanka tamil news
Mayoorikka
3 years ago
ரோஹிதவுக்கு வழங்காமல் ராஜிதவுக்கு கொடுப்பது பாரிய அநீதி!

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் அதே மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரோஹிதவுக்கு அமைச்சுப் பதவியை வழங்காமல் ராஜிதவுக்கு மட்டும்  அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாம் என ஜனாதிபதியிடம்  கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர்  கூறியுள்ளார்.

ரோஹித அபேகுணவர்தன கட்சியின் வளர்ச்சிக்காக அதிக அர்ப்பணிப்புகளை செய்தவர். அவருக்கு வழங்காமல் ராஜிதவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் அது பாரிய அநீதி என ஜனாதிபதியிடம் கட்சி மேலும் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4