நிஷான் மதுஷ்கவின் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் இலங்கை அணி

#Ireland #Srilanka Cricket #Test #Tamilnews #Sports News #Lanka4
Prasu
3 years ago
நிஷான் மதுஷ்கவின் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் இலங்கை அணி

அயர்லாந்து அணிக்கு எதிராக தமது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இலங்கை அணிக்காக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷ்க தனது முதலாவது இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.

தற்போது அவர் 202 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறார்.

22 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 492 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

மறு முனையில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வரும் குசல் மெந்திஸ் 160 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 115 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து தனது முதல் இன்னிங்ஸிற்காக 492 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4