பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

#SriLanka #weather #Rain #Lanka4 #Tamilnews
Prathees
3 years ago
பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இன்று (30) பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை இந்த அறிவிப்பு செல்லுபடியாகும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் மி.மீ. 75க்கு மேல் பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (30) பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை இந்த அறிவிப்பு செல்லுபடியாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4