சூடானில் உள்ள 18 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற மறுப்பு - வெளிவிவகார அமைச்சு

Kanimoli
3 years ago
சூடானில் உள்ள 18 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற மறுப்பு - வெளிவிவகார அமைச்சு

சூடானில் உள்ள 18 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வேலை இழக்க நேரிடும் என்று கூறி, ஒரு குழு சூடானில் தங்க விருப்பம் தெரிவித்ததாக, வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

 எவ்வாறாயினும், இதுவரையில் சூடானில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்த 34 இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்களில் 14 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் மேலும் 6 பேர் சவூதி அரேபியாவின் ஜித்தாவை சென்றடைந்துள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

 மேலும் 14 இலங்கையர்கள் போர்ட் சூடானில் தங்கியுள்ளதாகவும், அவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4