வல்லை முனியப்பர் கோவிலடி பழக்கடை இளைஞன் கொலையா? தற்கொலையா?: விசாரணை ஆரம்பம்

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
3 years ago
வல்லை முனியப்பர் கோவிலடி பழக்கடை இளைஞன் கொலையா? தற்கொலையா?: விசாரணை ஆரம்பம்

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்த இளைஞன் பழக்கடைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (02) செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 பலாலியை சேர்ந்தவரும் தற்போது அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வசித்து வருபவருமான வசந்தகுமார் ஸ்ரீகாந்த் (வயது 36) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 சடலம் காணப்படும் நிலை சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ளமையால், கொலையா? தற்கொலையா? என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

 விசாரணைகளின் பின்னர் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4