தையிட்டி விகாரை விவகாரம் சுமூகமான முறையில் தீர்த்து வைக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ்

#SriLanka #Douglas Devananda #Jaffna #Thaiyiddi
Soruban
3 years ago
தையிட்டி விகாரை விவகாரம் சுமூகமான முறையில் தீர்த்து வைக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ்

வடக்கில் இடம்பெற்றுவரும் போராட்டங்களிற்கு காராணமான தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பான ஆவணங்களை ஆராயவுள்ளதுடன் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார், அத்துடன் இந்த விவகாரத்தில் அத்துமீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். 

 வியாழக்கிழமை (04) இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே கடற்றொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 இதுதொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த பகுதிகளில் சிறிய விகாரைகள் அமைக்கப்பட்டிருந்ததும் பின்னர் அந்தப் பகுதிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டபோது அவை அகற்றப்பட்டிருப்பதையும் சில இடங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

 இவ்வாறான நிலையிலேயே, தையிட்டி விகாரை தொடர்பாக சில தரப்புக்களினால் தற்போது பேசப்படுகிறது. இதற்கான அடிக்கல் 2018 ஆம் ஆண்டு அப்போதைய வடக்கு மாகாண ஆளுநரினால் நாட்டப்பட்டிருக்கிறது. விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி தொடர்பான விபரங்களை சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளரிடம் கோரியிருக்கின்றேன் . 

 அவற்றை ஆராய்வதுடன், விரைவில் ஜனாதிபதிக்கு வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பிலும் பிரஸ்தாபிக்க எதிர்பார்க்கின்றேன். 

 வெடுக்குநாறி விவகாரத்தினை சுமுகமான முறையில் தீர்த்து வைத்தது போன்று இந்த விடயங்களும் ஜனாதிபதி சரியான முறையில் தீர்த்து வைப்பார்.” என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

 அதேவேளை, மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவது தொடர்பாகவும் அரசாங்க திட்டங்களை வினைத் திறனாக யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கும் வகையிலும் பல்வேறு விடயங்கள் இன்றைய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இதன்போது, நாட்டை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகள் வெற்றியடைந்து வருவதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

 உள்ளூர் உற்பத்திகள் தொடர்பில் மக்களுக்கு ஆர்வத்தினை ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உள்ளூர் உற்பத்திகளில் மக்களுக்கு ஆர்வத்தினை ஏற்படுத்தும் வகையில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

 மேலும், உள்ளூர் உற்பத்திகள் அறுவடை செய்யப்படுகின்ற காலப் பகுதிகளில், 

குறித்த பொருட்களுக்கான இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்பட்டு, தாராளமான சந்தை வாய்ப்பினையும் சிறந்த விலையையும் பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கை அமைச்சரவை ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4