இலங்கையில் 3 திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் இந்திய அரசு கவனம்

#India #SriLanka #Development #Project #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
இலங்கையில் 3 திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் இந்திய அரசு கவனம்

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், சூரிய சக்தி திட்டம், இந்தியா-இலங்கை இடையே கப்பல் சேவையை தொடங்குதல் ஆகிய 3 திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

ஜனாதிபதியின் தலைமைப் பணிப்பாளர், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் திரு. சாகல ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதில் உதவ இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது அதற்கான பணிகள் தற்போது சுறுசுறுப்பாக உள்ள நிலையில், விரைவில் தொடங்கப்பட உள்ளது.

வடக்கில் மூன்று தீவுகளில் சூரிய மின்சக்தி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதனை விரைவில் ஆரம்பிப்பது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

 இது தவிர, இந்தியாவில் ராமேஸ்வரம் மற்றும் தலை மன்னார் இடையே படகு சேவையை ஆரம்பிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் காங்கேசன்துறைக்கும் கரிகாலுக்கும் இடையிலான படகு சேவை இறுதிக்கட்டத்தில் உள்ளது.

 இந்த நடவடிக்கைகளை விரைவில் தொடங்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4