கனடாவில் கத்திக் குத்திற்கு இலக்காகி தாயும் பிள்ளையும் உயிரிழப்பு!

#Death #Police #Canada #world_news #Crime
Mayoorikka
1 year ago
கனடாவில் கத்திக் குத்திற்கு இலக்காகி தாயும் பிள்ளையும் உயிரிழப்பு!

கனடாவில் தாயும் பிள்ளையும் கத்திக் குத்திற்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

 கண்டா எட்மோன்டனில் க்ரோவ்வேட் பிலேயின்ஸ் பாடசாலைக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 11 வயது பிள்ளை மற்றும் தாய் மீது கொடூர கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 35 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 தாக்குதல்தாரிக்கும் உயிரிழந்தவர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.