நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுப்பு

#SriLanka #Tourist #NuwaraEliya #JeevanThondaman
Kanimoli
3 years ago
நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள்  முன்னெடுப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் பங்கேற்புடன் இன்று(08) நடைபெற்ற கூட்டத்திலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இதன்போது நுவரெலியா நகரை சிறப்பானதொரு சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் கருத்தகளும், ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. இவை தொடர்பில் ஆராய்ந்து, உரிய ஆய்வுகளின் பின்னர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென குழுவொன்றும் அமைக்கப்பட்டது. சுமார் 10 இற்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய இக்குழுவில் சுற்றுலாத்துறை, பாதுகாப்பு, நிர்வாகம், திட்டமிடல் துறைசார் அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4