சமூக நீதிக்கு அமைவாக வளங்களைப் பகிர்ந்தளிக்க அரசாங்கத்தின் தலையீடு அவசியம் - சஜித் பிரேமதாச

#SriLanka #srilankan politics
Kanimoli
3 years ago
சமூக நீதிக்கு அமைவாக வளங்களைப் பகிர்ந்தளிக்க அரசாங்கத்தின் தலையீடு அவசியம் - சஜித் பிரேமதாச

பொதுவாக நோக்குமிடத்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கையின் பிரகாரம், தீவிர முதலாளித்துவம், தீவிர நட்பு வட்டார முதலாலித்துவம் என்பன முற்றாக நிராகரிக்கப்படுவதாகவும், அதுமட்டுமல்லாமல், அனைத்தையும் அரசே செய்ய வேண்டும், அரசாங்கமே சகல முயற்சியாண்மைகளையும் செய்ய வேண்டும் என்ற தீவிர சோசலிசவாதமும் இங்கு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 நாட்டிற்கு பொதுவாக பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் பொது இணக்கப்பாட்டினை ஏற்படுத்தும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட எதிர்க்கட்சியின் சர்வகட்சி ஒன்றியத்தின் செயற்குழு இன்று(08) பாராளுமன்றத்தில் கூடியபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 இதன்பிரகாரம், நாட்டின் தற்போதைய மாற்று மத்தியஸ்த பாதை எனும் மூன்றாவது பாதையே எனவும், அந்த மாற்றில், தனியார் தொழில்முனைவு, சமூக சந்தை பொருளாதாரம் மற்றும் பெரும்பாலான வழங்கல் மற்றும் தேவை தனியார் தொழில் முனைவோர் மூலம் மேற்கொள்ள முடியும் என்றாலும் அவ்வாறு சமூகத்தில் உருவாக்கப்படும் செல்வத்தை தனியார் தொழில் முனைவோர் மூலம் பகிர்ந்தளிக்க முடியாது எனவும், சமூக நீதிக்கு அமைவாக வளங்களைப் பகிர்ந்தளிக்க அரசாங்கத்தின் தலையீடு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 உண்மையில், ஐக்கிய மக்கள் சக்தி மத்தியஸ்த வழியிலான பொருளாதார நோக்கைக் கொண்டுள்ளதாகவும், அரசாங்கத்தால் மட்டுமே பணத்தை உருவாக்க முடியாது என்பதனால் மனிதாபிமான முதலாளித்துவம் அவசியம் என்றும், அது நியாயமாக அமைய வேண்டும் என்றும், அதன் மூலம் அனைவரையும் வெற்றிபெறச் செய்வதாக அமைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4