பிறந்த சிசுவை கைவிட்டுச்சென்ற தாயை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவு

#SriLanka #Court Order #kandy #Baby_Born
Prasu
3 years ago
பிறந்த சிசுவை கைவிட்டுச்சென்ற தாயை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவு

கண்டி – எல்கடுவ வத்தேகம பிரதேசத்தில் சிசுவொன்றை கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மே 4 ஆம் திகதி புத்தர் சிலையொன்றுக்கு அருகில், பிறந்து 5 நாட்களேயான சிசு கைவிடப்பட்டு சென்றுள்ளது. இரண்டு பெண்களால் குறித்த இடத்திலிருந்து குழந்தையை கண்டெடுக்கப்பட்டது. குழந்தை தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளது. 

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குழந்தையின் தாய் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

எவ்வாறாயினும், குழந்தையின் தேவை கருதி அவரும் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 

பிறந்து 5 நாட்களேயான சிசுவை கைவிட்டு சென்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பெயரின் அதனது தாய் வத்தேகம காவல்துறையால் கடந்த 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

 குறித்த பெண், மாத்தளை – கரகஹஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​அவர் தனது வீட்டில் குழந்தையைப் பெற்றெடுத்து விட்டு, மாத்தளை பகுதிக்கு சென்ற பாரவூர்தியில் அவ்விடத்துக்கு வந்து குழந்தையை கைவிட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4