இலங்கைக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை!

#SriLanka #weather #Rain
Mayoorikka
3 years ago
இலங்கைக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கமானது ஆழமான ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து இன்று 8.30 மணிக்கு வட அகலாங்கு 8.80 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.90 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது. 

 அது வடக்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அடுத்த சில நாட்களில் ஒரு பாரிய சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 வட அகலாங்குகள் 03N இற்கும்20N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள்85E இற்கும்100E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

 கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4