யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் கைது

#SriLanka
Kanimoli
3 years ago
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இருந்து 9ம் திகதி அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் மூவர் புளியம்பொக்கணை களவெட்டிதிடல் பகுதியில் வசிக்கும் ஒருவரை தாக்குவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்ட நிலையில் அதில் இருவர் தப்பிச் சென்றுள்ளனர்.

 மக்களால் பிடிக்கப்பட்டவர் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து வாள் ஒன்றும், இரும்பு கம்பி மற்றும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டு தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 

அவர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை இன்றை தினம்11.05.2023 கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 அத்துடன் கைதான சந்தேக நபருக்கு யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்பான வழக்குகள் உள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4