முழுமையான ஒத்துழைப்பு தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்: வட மாகாண ஆளுநர் சார்ள்ஸ்

#SriLanka #Sri Lanka President #NorthernProvince #Governor #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
3 years ago
முழுமையான ஒத்துழைப்பு தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்: வட மாகாண ஆளுநர் சார்ள்ஸ்

மக்களுக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பை தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எங்களிடம் உறுதி அளித்திருக்கின்றார் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

 பதவிப்பிரமாணத்தின் பின் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மக்களுக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பை தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எங்களிடம் உறுதி அளித்திருக்கின்றார்.

 தாராள சிந்தனை கொாண்ட ஒரு ஜனாதிபதிக்கு கீழே வடமாகாணத்திலே ஆளுநராக பதவியேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மக்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றும்படியும் இது சம்பந்தமாக தொடர்ந்து கலந்துரையாடுமாறும் எம்மிடம் கூறி இருக்கின்றார்.

 ஜனதிபதி தருகின்ற கடமைகளை செய்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அத்தோடு மக்களுக்கு தேவையானவற்றை மக்கள் பிரதிநிதிகள் இணைந்து செய்வதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4