சென்னையில் ஐபிஎல் பிளே ஆப் போட்டி; ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விநியோகிக்கப்படும்- சி.எஸ்.கே நிர்வாகம் அறிவிப்பு

#Tamil Nadu #sports #Tamilnews #Chennai
Mani
3 years ago
சென்னையில் ஐபிஎல் பிளே ஆப் போட்டி; ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விநியோகிக்கப்படும்- சி.எஸ்.கே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் பிளே ஆஃப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே விநியோகிக்கப்படும் என சி.எஸ்.கே நிர்வாகம் அறிவிப்பு.

வரும் 23, 24 ம் தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இரண்டு பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற ஏழு லீக் போட்டிகளுக்கும் நேரடியாக கவுண்டர் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் பிளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என சி.எஸ்.கே அணியின் நிர்வாகம் சார்பில் தகவல் அளித்துள்ளனர்.

இன்னும் ஓரிரு நாட்களில் டிக்கெட் விற்பனை தேதியை ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிடும் என தகவல்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4