நண்பர்கள் ஒத்துழைப்புடன் நினைத்தவற்றில் முன்னேற்றம் காணும் துலா ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
11 months ago
நண்பர்கள் ஒத்துழைப்புடன் நினைத்தவற்றில் முன்னேற்றம் காணும் துலா ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : உங்கள் செயல்களில் எதிர்பார்த்த நன்மைகள் இன்று தள்ளிப்போகும். பரணி : கவனக்குறைவால் பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். அவசர முடிவுகள் சங்கடத்தை உண்டாக்கும். கார்த்திகை 1 : அவசர வேலைகளால் பதட்டம் உண்டாகும். வரவு செலவில் நெருக்கடி தோன்றும்.

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4 : வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்திற்காக திடீர் செலவு செய்வீர்கள். ரோகிணி : வரவிற்கேற்ற செலவு உண்டு. நிதானமுடன் செயல்படுங்கள். மிருகசீரிடம் 1, 2 : கடன் வாங்கி செலவு செய்வீர்கள். ஒருசிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபம் தரும். எதிர்பார்த்தவற்றில் நன்மை அடைவீர்கள். திருவாதிரை : புதிய முயற்சி ஒன்றில் முன்னேற்றம் காண்பீர்கள். வர வேண்டிய பணம் வரும். புனர்பூசம் 1, 2, 3 : பணி புரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்நாள்.

கடகம்

புனர்பூசம் 4 : தொழிலில் இருந்த மந்த நிலை சரியாகும். உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். பூசம் : புதிய திட்டங்களை செயல்படும் முயற்சி பலிதமாகும். வழக்கு சாதகமாக முடியும். ஆயில்யம் : தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். நிதிநிலை உயரும்.

சிம்மம்

மகம் : குடும்பத்தில் இருந்த சங்கடமான நிலை மாறும். உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை ஏற்படுத்தும். பூரம் : நீங்கள் நினைத்த ஒரு செயலை நிறைவேற்றுவீர்கள். பொருளாதார நிலை உயரும். உத்திரம் 1 : உங்கள் முயற்சியில் சிறு சிறு தடைகளுக்குப்பின் நிறைவேறும். எதிர்பார்த்த பண வரவு உண்டு.

கன்னி

உத்திரம் 2, 3, 4 : மற்றவரை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். அஸ்தம் : எதிர்பார்த்த செயல்களில் பின்னடைவும் மறைமுக எதிர்ப்பும் உண்டாகும் நாள். சித்திரை 1, 2 : மறைமுக தொல்லை விலகும் என்றாலும் புதிய முயற்சி எதுவும் இன்று வேண்டாம்.

துலாம்

சித்திரை 3, 4 : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். புதிய முயற்சி லாபமளிக்கும். சுவாதி : நண்பர்கள் ஒத்துழைப்புடன் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பெரிய நன்மையை அளிக்கும். விசாகம் 1, 2, 3 : குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்தவற்றில் முன்னேற்றம் காண்பீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4 : உற்சாகத்துடன் செயல்படுவீர்கள் உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். மகிழ்ச்சி அதிகரிக்கும். கேட்டை : வேகமாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். தொழிலில் லாபம் உண்டாகும்.

தனுசு

மூலம் : செயல்களில் சில தடைகளை சந்திப்பீர்கள். சிந்தித்து செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். பூராடம் : செயலில் கடும் முயற்சிக்குப்பின் வெற்றி காண்பீர்கள். பெற்றோரால் அதிக நன்மையுண்டு. உத்திராடம் 1: வேலைக்காக மேற்கொண்ட முயற்சி பலிக்கும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வருவார்கள்.

மகரம்

உத்திராடம் 2, 3, 4 : உங்கள் மனம் விரும்பியவாறு செயல்படுவீர்கள். பிள்ளைகள் வழியில் நன்மைக் காண்பீர்கள். திருவோணம் : எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர். உங்கள் எண்ணம் இன்று எளிதாக நிறைவேறும். அவிட்டம் 1, 2 : சங்கடங்களை சந்தித்தாலும் உங்கள் செயலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.

கும்பம்

அவிட்டம் 3, 4 : திட்டமிட்டு செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். சதயம் : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைபட்ட செயல் அமைதியாக நடக்கும். பூரட்டாதி 1, 2, 3: உறவினர்கள் ஆதரவால் உங்கள் முயற்சிவெற்றி பெறும். மனச்சங்கடம் தீரும்.


மீனம்

பூரட்டாதி 4 : வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். உங்கள் முயற்சி நிறைவேறும். உத்திரட்டாதி : நீண்ட நாளாக எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். ரேவதி : நீங்கள் எதிர்பார்த்தவற்றில் நன்மை தோன்றும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.