எதிர்பாராத செலவுகளால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் மிதுன ராசியினர் - இன்றைய நாள் பலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
எதிர்பாராத செலவுகளால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் மிதுன ராசியினர் - இன்றைய நாள் பலன்

மேஷம்

அசுவினி : மதியம் வரை உங்கள் செயல் இழுபறியாக இருந்தாலும் அதன்பின் சரியாகும். பரணி : முன்னோர் வழிபாடு நன்மை தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை 1: நண்பர்கள் உதவியுடன் உங்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். பண வரவு அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4 : நேற்று முயற்சி செய்த செயல் இன்று சிறப்பாக நிறைவேறும். ரோகிணி : வீண் குழப்பம் அதிகரிக்கும் அதனால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. மிருகசீரிடம் 1, 2: வாழ்க்கைத் துணையின் வழியே அனுகூலம் ஏற்படும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : மதியத்திற்கு மேல் திடீர் பயணம் உண்டாகும். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். திருவாதிரை : எதிர்பாராத செலவுகளால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். புனர்பூசம் 1, 2, 3: அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவசர வேலைகள் வந்து அலைக்கழிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4 : நீங்கள் தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். பூசம் : நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வரவேண்டிய பணம் வசூலாகும். ஆயில்யம் : வழக்கு வெற்றியாகும். கூட்டுத் தொழில் தொடங்குவது பற்றி நண்பருடன் ஆலோசிப்பீர்கள்.

சிம்மம்

மகம் : செயல்களில் இருந்த இடையூறு விலகும். தடைபட்ட வேலைகளை நிறைவேற்றுவீர்கள். பூரம் : நினைத்தது நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உத்திரம் 1 : பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பண வரவு உண்டு.

கன்னி

உத்திரம் 2, 3, 4 : இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். உங்கள் விருப்பம் இன்று நிறைவேறும். அஸ்தம்: பழைய பிரச்னைகளுக்கு முடிவு காண்பீர். உறவுகள் வழியே இன்று சில சங்கடங்களை சந்திப்பீர்கள். சித்திரை 1, 2 : முன்னோர் வழிபாட்டால் மனதில் நிம்மதி உண்டாகும் நாள்.

துலாம்

சித்திரை 3, 4 : நண்பர்களால் நன்மை ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதில் லாபம் காண்பீர்கள். சுவாதி : எதிர்பாராத ஒரு பிரச்னையை சந்திப்பீர்கள் என்றாலும் அதை சமாளித்து வெற்றி அடைவீர்கள். விசாகம் 1, 2, 3 : செயல்களில் உண்டான சங்கடம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும்.

விருச்சிகம்

விசாகம் 4 : நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். அனுஷம் : குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். கேட்டை : கணவன் மனைவிக்கிடையே உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். வரவு அதிகரிக்கும்.

தனுசு

மூலம் : செயல்களில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும். பூராடம் : சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1 : ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

மகரம்

உத்திராடம் 2, 3, 4 : பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர். பொருளாதார சிக்கல் தீரும். திருவோணம் : பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு பேசி தீர்வு காண்பீர்கள். அவிட்டம் 1, 2 : உங்கள் திறமை இன்று வெளிப்படும். இழுபறியாக இருந்த பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3, 4 : மனதில் இருந்த குழப்பம் விலகும். நீங்கள் நினைத்ததை இன்று அடைவீர்கள். சதயம் : எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் காண்பீர்கள். நிறைவேறாமல் இருந்த ஒரு எண்ணம் நிறைவேறும். பூரட்டாதி 1, 2, 3 : பொழுது போக்கு விஷயங்களில் மனம் செல்லும். செலவுகள் அதிகரிக்கும்.

மீனம்: 

பூரட்டாதி 4 : அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். நல்லவர் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள். உத்திரட்டாதி : தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். ரேவதி : நேற்றைய எண்ணம் ஒன்று இன்று நிறைவேறும். முன்னோர் வழிபாடு நன்மை தரும்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு