உக்ரைன் போரில் 8900 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் – ஐ.நா
#Death
#people
#Ukraine
#War
#Public
Prasu
1 year ago

உக்ரைனில் நடைபெற்று வரும் போரில், 8900 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 15,100 பேர் காயமடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
“கடுமையான விரோதங்கள் நடந்து கொண்டிருக்கும் சில இடங்களில் இருந்து தகவல் பெறுவது தாமதமாகி வருவதால், பல அறிக்கைகள் இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும், இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 40ஆண்கள், 2,403 பெண்கள், 275 சிறுவர்கள் மற்றும் 218 சிறுமிகள், 30 குழந்தைகள் மற்றும் 1,929 பெரியவர்கள் உள்ளடங்குவதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.



