புத்தூர் பகுதியில் வைத்து 23 வயதுடைய நபர் ஒருவர் 20 லீட்டர்கள் கசிப்புடன் கைது

#SriLanka #Jaffna #Arrest #Police #Lanka4
Kanimoli
3 years ago
புத்தூர் பகுதியில் வைத்து 23 வயதுடைய நபர் ஒருவர்  20 லீட்டர்கள் கசிப்புடன் கைது

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் பகுதியில் வைத்து 23 வயதுடைய நபர் ஒருவர் இன்றையதினம் 20 லீட்டர்கள் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 அவருக்கு ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளதாகவும், அந்த வழக்குக்கு மல்லாகம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4