ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் பிரதமரிடம் இலகு இரயில் திட்டம் தொடர்பாக தனது வருத்தத்தினை தெரிவித்துள்ளார்.

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Lanka4 #Japan #லங்கா4 #ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் பிரதமரிடம் இலகு இரயில் திட்டம் தொடர்பாக தனது வருத்தத்தினை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ஜப்பான் விஜயத்தின் போது இன்று நடந்த பேச்சுவார்த்தையில் இலகு ரயில் விடயமாக தனது வருத்தத்தினை ஜப்பான் பிரதமருக்கு தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய ஆதரவுடன் செயற்படுத்தப்பட்டு வந்த கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் இடைநிறுத்தப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் அரசாங்கத்திடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இன்று (25) காலை டோக்கியோவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இருதரப்பு பாரிய திட்டங்களை உடன்பாடு இன்றி நிறுத்தவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜப்பான் பிரதமர் அன்புடன் வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஜப்பான் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததோடு, ஜப்பானிய பிரதமரின் உதவிக்கு நன்றி தெரிவித்தார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4