பாகிஸ்தான் மோதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

#Death #Attack #Pakistan #GunShoot
Prasu
2 years ago
பாகிஸ்தான் மோதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் கைபர் பக்துங்வா மாகாணம் கோத் ஆசாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். 

அவர்களுக்கு இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பாதுகாப்பு படையினர் ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். 

இவர்கள் அனைவரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதோடு அப்பாவி பொதுமக்களை கொல்வது போன்ற குற்றங்களையும் செய்து வந்தவர்கள் என பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!