தையிட்டியில் சட்டவிரோத கைது: சுமந்திரன் கண்டனம்

#Sri Lanka #M. A. Sumanthiran #Jaffna #Thaiyiddi
Jesintha
4 days ago
தையிட்டியில் சட்டவிரோத கைது: சுமந்திரன் கண்டனம்

தையிட்டியில் ஜனநாயக முறைப்படி போராட்டம் மேற்கொண்டவர்களை கைது செய்தமையை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

 இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 

தையிட்டியில் மக்களின் நிலத்தினை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி ஜனநாயக ரீதியில் இடம்பெற்ற போராட்டத்தில் பங்குகொண்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

 ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்யும் சம்பிரதாயம் கூட தெரியாமல் அநாகரிகமான முறையில் கைது செய்ய முற்பட்டு நடு வீதியில் விட்டு சென்றமையையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

 கைது செய்யப்பட்ட ஒருவரின் சட்டதரணி அவரை பார்வையிட முடியும் என்பதே சட்ட ஏற்பாடாக இருக்கும் நிலையில் அதற்கு கூட அனுமதிக்காது மக்கள் செல்லமுடியாது தடுக்கப்படும் பகுதிகள் உள்ள பொலிஸ் நிலையத்தில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 சட்டவிரோதமான முறையில் இடம்பெற்ற இந்த கைதுகளையும் சட்டத்தை மீறும் பொலிசாரின் அராஜக நடவடிக்கையினையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்தார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு