IPL இறுதி போட்டியில் கலை நிகழ்ச்சிகள், விழாவில் பாடும் பாடகி ஜோனிதா காந்தி- மகிழ்ச்சி அலையில் ரசிகர்கள்!

#India Cricket #IPL #T20 #Cricket #match #IPL2023
Mani
3 years ago
IPL இறுதி போட்டியில் கலை நிகழ்ச்சிகள், விழாவில் பாடும் பாடகி ஜோனிதா காந்தி- மகிழ்ச்சி அலையில் ரசிகர்கள்!

ஐபிஎல் இறுதிப் போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியின் நிறைவு விழாவில் ‘அரபிக்குத்து’ உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பாடகி பாட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ஐபிஎல் போட்டி நடைபெற்று வந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெறும் மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும்.

இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ள நிலையில் ஒரு சில கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அரபிக்குத்து’ என்ற சூப்பர் ஹிட் பாடலை அனிருத்துடன் பாடிய ஜொனிதா காந்தி சில பாடல்களை பாட உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த விழாவில் ஜொனிதா காந்தி ‘அரபிக்குத்து’ உட்பட சில தமிழ் பாடலையும் பாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4