நாடளாவிய போதை ஒழிப்பு நடவடிக்கை: 726 பேர் கைது!

#SriLanka #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 hours ago
நாடளாவிய போதை ஒழிப்பு நடவடிக்கை: 726 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் "முழுநாடும் ஒன்றாக" போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ், நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட முற்றுகைகளில் 726 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 3 சந்தேக நபர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதுடன், ஏனையவர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் போதைப்பொருள் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல்துறை அணுகுமுறையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விநியோகத்தைத் தடுத்தல், தேவையைக் குறைத்தல், நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்துதல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் தடுப்புத் திட்டங்களைச் செயற்படுத்துதல் மற்றும் சமூகத்தைப் போதைப்பொருளுக்கு எதிராக வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மாஅதிபரின் பணிப்புரைகளுக்கு அமைய இந்தத் திட்டம் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாகச் செயல்படுத்தப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4