அவிசாவளையில் துப்பாக்கிச் சூடு

#SriLanka #Police #Lanka4 #GunShoot #sri lanka tamil news
Prathees
3 years ago
அவிசாவளையில் துப்பாக்கிச் சூடு

அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் இன்று (26) மாலை 6.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 முகமூடி அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய திருமணமாகாத ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

 சம்பவம் தொடர்பில் அவிசாவளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4