IPL Qualifier02 - மும்பையை வீழ்த்தி குஜராத் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

#India #IPL #Gujarat #Mumbai
Prasu
3 years ago
IPL Qualifier02 - மும்பையை வீழ்த்தி குஜராத் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடரின் 2வது குலிபையர் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை எதிர்க்கொள்ளும். 

அதன்படி குலிபையர் 2-ல் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சு தேர்வு செய்தது. 

இதன் படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சஹா, சுப்மன் கில் களமிறங்கினர். சஹா 18 ரன்னில் அவுட் ஆனார். ஆனால், அடுத்து வந்த சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

சுப்மன் கில் 60 பந்துகளில் 7 பவுண்டர்கள், 10 சிக்சர்கள் உள்பட 129 ரன்கள் குவித்து அவுட் ஆனார். சாய் சுதர்சன் 43 ரன்கள் எடுத்தார். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது. 

இதையடுத்து, 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, நேஹல் வதேரா களமிறங்கினர். 

வதேரா 4 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அடுத்து களமிறங்கிய திலக் வர்மா 43 ரன்னிலும், கமரூன் கிரீன் 30 ரன்னிலும் அவுட் ஆகினர். சற்று நிலைத்து நின்று ஆடிய சூர்யகுமார் 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். 

ஆனால், அடுத்து வந்த விஷ்னு வினோத் 5 ரன்னிலும், டிம் டேவிட் 2 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அடுத்து களமிறங்கிய ஜோர்டன் 2 ரன்னிலும், சாவ்லா ரன் எதுவும் எடுக்காமலும் (0) ஆட்டமிழந்தனர். 

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்சை 62 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றிபெற்றது. 

சிறப்பாக பந்து வீசிய மோஹித் சர்மா 2.2 ஓவரில் 10 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் குஜராத் டைட்டன்ஸ் நுழைந்துள்ளது. 

வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் , சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்ள உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4