புதிய முயற்சி மற்றும் வெளியூர் பயணங்களை தவிர்த்து நிதானத்தைக் கடைபிடிக்கவேண்டிய மகர ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
புதிய முயற்சி மற்றும் வெளியூர் பயணங்களை தவிர்த்து நிதானத்தைக் கடைபிடிக்கவேண்டிய மகர ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : அரசு வழியில் உண்டான சிக்கல் விலகும். தடைபட்டிருந்த முயற்சி நிறைவேறும். பரணி : காலையிலேயே நல்ல தகவல் வரும். செயல் ஒன்று நீங்கள் நினைத்தபடி நடந்தேறும். கார்த்திகை 1: உறவினர்களிடம் ஏற்பட்ட சங்கடம் தீரும். புதிய சொத்து சேரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் லாபம் கூடும் நாள். ரோகிணி : பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். மிருகசீரிடம் 1,2 : தாய்வழி உறவினர்கள் ஆதரவுடன் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த முயற்சி இன்று நடக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. திருவாதிரை : அரசியல்வாதிகளின் எண்ணம் நிறைவேறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். புனர்பூசம் 1,2,3 : துணிச்சலுடன் செயல்படுவீர். மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்.

கடகம்

புனர்பூசம் 4 : துணிச்சலுடன் செயல்படுவீர். விஐபிகளின் ஆதரவால் விரும்பியதை அடைவீர். பூசம் : தடைபட்டிருந்த வருவாய் வரும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர். ஆயில்யம் : உங்கள் பேச்சாற்றலால் சமூகத்தில் உங்கள் புகழ் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும்.

சிம்மம்

மகம் : திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை ஏற்படும். குழப்பங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். பூரம் : பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். பாராட்டப்படுவீர்கள். உத்திரம் 1 : உங்கள் மனம் காட்டும் வழியில் இன்று செயல்படுவீர். கவனக்குறைவால் சில சங்கடம் தோன்றும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : திடீரென்று வெளியூர் பயணம் மேற்கொள்வீர். செலவு அதிகரிக்கும். வருவாயில் நெருக்கடி ஏற்படும். அஸ்தம் : அலைச்சல் அதிகரித்து சோர்வடைவீர்கள் என்றாலும் உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள். சித்திரை 1,2 : குடும்பத்தினர் ஆசையை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டு. 

துலாம்

சித்திரை 3,4 : செயல்களில் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். சுவாதி : நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். நிதிநிலை உயரும். விசாகம் 1,2,3 : வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். லாபமான நாள். 

விருச்சிகம்

விசாகம் 4: தொழிலில் இருந்த தடை விலகும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். அனுஷம் : வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். வருவாய் அதிகரிக்கும். கேட்டை : நண்பர்கள் ஒத்துழைப்புடன் நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். 

தனுசு

மூலம் : கடந்தகால அனுபவத்தைக் கொண்டு உங்கள் முயற்சியில் இன்று வெற்றி காண்பீர்கள். பூராடம் : தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். பயணத்தால் நன்மை அதிகரிக்கும். உத்திராடம் 1 : பிறர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் செயலில் வெற்றி காண்பீர்கள். லாபமான நாள். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறாமல் போகும். செயல்களில் சங்கடம் தோன்றும். திருவோணம் : புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. அவிட்டம் 1,2 : வீண் சச்சரவுகள் உங்களைத் தேடி வரும். நிதானத்தைக் கடைபிடியுங்கள். 

கும்பம்

அவிட்டம் 3,4 : நண்பர்கள் ஒத்துழைப்புடன் புதிய முயற்சி வெற்றி பெறும். பண வரவு அதிகரிக்கும். சதயம் : தம்பதிகளுக்குள் உண்டான பிரச்னை விலகும். குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பூரட்டாதி 1,2,3 : உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மீனம்

பூரட்டாதி 4 : பணியிடத்தில் மறைமுக எதிரி விலகிச் செல்வர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உத்திரட்டாதி : புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர். உங்களுக்கு எதிரானவர் விலகிச் செல்வார்கள். ரேவதி : வியாபாரத்தில் இருந்த நெருக்கடி அகலும். எதிரிகளால் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு