ஒரே நாளில் முடிவடைந்த யாழ் சிறைக் கைதியின் போராட்டம்

#SriLanka #Jaffna #Prison #Lanka4 #sri lanka tamil news #prisoner
Prathees
3 years ago
ஒரே நாளில் முடிவடைந்த யாழ் சிறைக் கைதியின் போராட்டம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

 வேறு சிறைக்கு மாற்றக் கோரி குறித்த கைதியால் போராட்டம் நடத்தப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

 குறித்த கைதி நேற்று காலை ஆரம்பித்த போராட்டம் இரவோடு முடிவடைந்தது.

 வீடுகளை உடைத்தல் மற்றும் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள இந்த கைதிக்கு 2040ஆம் ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 ஒழுக்காற்று காரணங்களால் குறித்த கைதி குருவிட்ட சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4