வங்கி வட்டி வீதத்தை குறைக்க மத்திய வங்கியும் அரசாங்கமும் தலையிட வேண்டும்!

#SriLanka #Bank #Central Bank
Mayoorikka
10 months ago
வங்கி வட்டி வீதத்தை குறைக்க மத்திய வங்கியும் அரசாங்கமும் தலையிட வேண்டும்!

தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் வங்கி வட்டி வீதத்தை கட்டுப்படுத்த மத்திய வங்கியும் அரசாங்கமும் தலையிட வேண்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 பாரிய வர்த்தகர்களின் பாரிய கடன்களை வாராக் கடன்களாக தள்ளுபடி செய்து சிறியளவிலான கடனாளிகளின் கடன் வட்டி வீதத்தை வர்த்தக வங்கிகள் அதிகரிப்பது நியாயமல்ல என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். .

 சில வணிக வங்கிகள் முன்பு வாங்கிய கடனுக்கான வட்டி விகிதங்களை மேலும் அதிகரிக்கச் செய்தன. இது பொது மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கலாநிதி பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டினார்.

 உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் போது வங்கிகளுக்கு ஏற்படக்கூடிய நட்டத்தை தடுக்கும் நோக்கில் சாதாரண மக்களின் கடனுக்காக அறவிடப்படும் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கலாநிதி பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டினார்.

 இவ்வாறான செயற்பாடுகளினால் நிதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை உடைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் வங்கி வட்டி வீதத்தை குறைக்க மத்திய வங்கியும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.