மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுகாதார ஒப்பந்தம்!
#SriLanka
#Maldives
#Healthy
Mayoorikka
1 year ago

மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுகாதார சேவைகளை மேம்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவித்தல் மற்றும் இரு நாட்டு மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துதல் போன்றவற்றின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உத்தேச உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அதற்கமைவாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு சுகாதார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.



