QR எரிபொருள் ஒதுக்கீடு - இன்று நள்ளிரவு முதல் விலை திருத்தம்

#SriLanka #prices #Lanka4 #sri lanka tamil news #petrol
Prathees
3 years ago
QR எரிபொருள் ஒதுக்கீடு - இன்று நள்ளிரவு முதல் விலை திருத்தம்

தற்போது QR அமைப்பின் மூலம் வெளியிடப்படும் எரிபொருள் ஒதுக்கீடு நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

 அதன்படி, ஒரு வார காலத்திற்கு மோட்டார் சைக்கிளுக்கு இதுவரை வழங்கப்பட்ட 07 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு இது 14 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு வழங்கப்படும் 8 லீற்றர் எரிபொருள் 14 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 மேலும், பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான 15 லீற்றர் எரிபொருள் கோட்டா 22 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 கார் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு 30 லிட்டரில் இருந்து 40 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன், பஸ்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை 60 லீற்றரிலிருந்தும், லொறிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை 75 லீற்றரில் இருந்து 125 லீற்றராகவும் அதிகரிக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

 இதேவேளை, விலை திருத்தத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இம்முறையும் எரிபொருளின் விலை குறைக்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4