இன்று காலை நீர்கொழும்பு பிரதேச செயலர் அவரது இல்லத்தில் மர்மான முறையில் உயிரிழப்பு

#SriLanka #Death #Negombo #Lanka4 #இலங்கை #லங்கா4 #Divisional Secretariat
இன்று காலை நீர்கொழும்பு பிரதேச செயலர் அவரது இல்லத்தில் மர்மான முறையில் உயிரிழப்பு

நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 

 அயேஷ் பெரேரா என்ற 42 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 இன்று காலை ஊழியர் ஒருவர் அவசர பணிக்காக புறப்படுவதற்காக அவரது அலுவலகத்திற்கு வந்து, பிரதேச செயலர் அறையில் தூக்கில் தொங்கியதை பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

 அதன்படி, குறித்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4