வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகி , வியாபாரத்தை விரிவு செய்யும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
10 months ago
வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகி , வியாபாரத்தை விரிவு செய்யும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும் நாள். பரணி : தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். கார்த்திகை 1 : புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் ரகசியங்களை வெளியிட வேண்டாம். 

 ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை உங்கள் விருப்பப்படி இன்று முடிவிற்கு வரும். ரோகிணி : வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மிருகசீரிடம் 1,2 : நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். நினைத்ததை சாதிப்பீர்கள். 

 மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்களை பேசித் தீர்ப்பீர்கள். திருவாதிரை : பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். வருவாய் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3 : முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குரு பகவான் அருளால் உங்கள் எண்ணம் நிறைவேறும். 

கடகம்

புனர்பூசம் 4 : சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோருக்கு சங்கடம் உண்டாக வாய்ப்புண்டு. பூசம் : அலைச்சல் அதிகரிக்கும். போராட்டத்திற்கு பின் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஆயில்யம் : வியாபாரத்தில் போட்டியை சந்திப்பீர்கள் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் லாபம் அடைவீர்கள். 

சிம்மம்

மகம் : துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். பூரம் : விமர்சனங்களை எதிர் கொள்வீர்கள். நினைத்ததை சாதிப்பீர். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள். உத்திரம் 1: பிறரால் செய்ய முடியாத செயலை செய்து வெற்றி பெறுவீர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 

கன்னி

உத்திரம் 2,3,4 : குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். அஸ்தம் : எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். சித்திரை 1,2 : வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். நிதிநிலை உயரும். 

துலாம்

சித்திரை 3,4 : மனதில் குழப்பம் உண்டாகும். உங்கள் கவனக்குறைவால் ஒரு முயற்சி நிறைவேறாமல் போகும். சுவாதி : செயல்களில் தடுமாற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த ஒன்றில் தாமதம் ஏற்படும். விசாகம் 1,2,3 : விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வந்து சமாதானம் பேசுவர். உங்கள் எண்ணம் நிறைவேறும். 

விருச்சிகம்

விசாகம் 4 : வரவுகள் அதிகரிக்கும் என்றாலும் திடீர் செலவுகளால் சங்கடம் அடையும் நாள். அனுஷம் : உழைப்பின் வழியே உங்கள் செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். கேட்டை : வாகன வகையில் செலவு உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு ஒன்று இழுபறியாகும். 

தனுசு

மூலம் : எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். நிதிநிலை உயரும். பூராடம் : வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்திராடம் 1 : குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : வேலைக்காக முயற்சி செய்து வந்தவர்களுக்கு நண்பர்கள் வழியே நல்ல தகவல் வரும். திருவோணம் : தொழிலை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்கு வரும். அவிட்டம் 1,2 : உங்கள் அணுகுமுறையால் நீங்கள் எதிர்பார்த்ததை இன்று அடைவீர்கள். நிதிநிலை உயரும். 

கும்பம்

அவிட்டம் 3,4 : புதிய முயற்சி ஒன்று நிறைவேறும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். சதயம் : செயல்களில் சிரமம் ஏற்பட்டாலும் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வரவு அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3 : வரவேண்டிய பணம் இன்று மொத்தமாக வரும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 

மீனம்

பூரட்டாதி 4 : செயல்கள் தாமதமாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். உத்திரட்டாதி : வழக்கமான பணிகளிலும் இன்று கவனமுடன் செயல்பட வேண்டும். பயணங்களில் கவனம் தேவை. ரேவதி : உங்கள் கவனக்குறைவால் சில சங்கடம் உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.