நடாஷாவிற்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றுமொருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!
#SriLanka
#Arrest
Mayoorikka
1 year ago

சமூக ஊடக ஆர்வலர் புருனோ திவாகரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் 08 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய அவர், நடாஷா தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



