வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ள தோனி

#Hospital #IPL #Player #Chennai #Surgery
Prasu
3 years ago
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ள தோனி

இறுதிப்போட்டியில் பேட்டிங் அட களமிறங்கும்முன் எம்.எஸ்.தோனி தனது காலுக்கு கட்டு போடும் காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. சென்னை கப்பர்‌ கிங்ஸ்‌ ஐபிஎல்‌ 2023 இறுதிப்‌ போட்டியில்‌ குஜராத்‌ டைட்டன்ஸ்‌ அணியை 5 விக்கெட்‌ வித்தியாசத்தில்‌ வீழ்த்தி ஐந்தாவது பட்டத்தை வென்றது.

CSK தலைவர் எம்.எஸ். தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும்‌ என்று பலர்‌ எதிர்பார்த்தனர்‌, ஆனால் அப்படி எதுவும் இன்னும் முடிவாக அறிவிக்கப்படவில்லை. தோனி தனது கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக மீண்டும் அடுத்த சீசனில் விளையாடுவார் என்றே நம்பப்படுகிறது.

ஒரு உத்வேகம்‌ தரும்‌ தலைவராக தோனி, தனது அதிரடியான பேட்டிங் ஸ்டைல், கேப்டன்சி மற்றும்‌ விக்கெட்‌ கீப்பிங்‌ திறமையால் தனது ரசிகர்களைக்‌ கவர்ந்திருக்கலாம்‌. 

ஆனால், இந்த சீசன் முழுவதும் அவர் கடுமையான முழங்கால்‌ வலியுடன் விளையாடியுள்ளார். தோனி ஓடும்போதும் பேருந்திலிருந்து இறங்கும்‌போதும் முழங்கால்‌ வலியால் சிரமப்படுவதைக்‌ காண முடிந்தது, ஏனெனில்‌ ஒவ்வொருமுறை போட்டி முடிந்தவுடன்‌ முழங்காலில்‌ ஐஸ்‌ பேக் வைத்துக்கொண்டிருந்தார்.

இறுதிப்‌ போட்டியிலும்‌, தோனி பேட்டிங்கிற்குச்‌ செல்வதற்கு முன்பு வலியை தாங்கிக்கொள்ள முழங்காலை இறுக்கமாக கட்டியிருந்தார்‌. இப்போட்டியில், தோனி சந்தித்த முதல்‌ பந்திலேயே அவுட்‌ ஆகியிருக்கலாம்‌, ஆனால் அவரது அர்ப்பணிப்பு அனைவராலும்‌ பாராட்டப்படுகிறது.

 ஐபிஎல்‌ போட்டியின்‌போது டிரஸ்ஸிங்‌ ரூமில்‌ ரகசியமாக எடுக்கப்பட்ட யாரும் பார்த்திராத காட்சிகள்‌ தற்போது இணையத்தில்‌ வைரலாக பரவி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4