வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் கைது

#SriLanka #Jaffna #Arrest #Police #Lanka4 #Fight
Kanimoli
3 years ago
வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் கைது

யாழ். நகரில் அண்மையில் இரவு வேளை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையிலான அணியினரால் கடந்த வாரம் யாழ். நகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வாள்வெட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 மற்றும் 20 வயதுடைய கொக்குவில் மற்றும் சுதுமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் கடை மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர்கள் கடையில் யூஸ் தருமாறு கோரியதாகவும் கடைப்பூட்டியதன் காரணமாக உரிமையாளர் தர மறுத்ததன் காரணமாக ஏற்பட்ட தகராறு காரணமாகவே 

 தாக்குதலை மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட நபர்கள் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதலை 6 பேர் கொண்ட குழு மேற்கொண்டதாகவும் அதில் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4