ஒடிசா ரயில் விபத்து; ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்!
விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று ரத்த தானம் செய்தனர். ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் விரைவு ரயில் கோர விபத்துக்குள்ளானது. நேற்று மாலை 7 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரெஸ், பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஒரு சரக்கு ரயில் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 233 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் மேற்பட்டள்ளது.
சுமார் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மீட்பு பணிக்காக களமிறக்கப்பட்டுள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று ரத்த தானம் செய்தனர்.குறிப்பாக இளைஞர்கள் பலர் விடிய விடிய ரத்த தானம் செய்துள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், உள்ளூர்வாசிகளின் மனித நேயத்தை பலரும் நெஞ்சுருக பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர்.